பா.ஜ.க.-வின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு வாக்காளர்கள் மயங்கிவிடக் கூடாது: ஹேமந்த் சோரன்
- பா.ஜ.க.-வின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு வாக்காளர்கள் மயங்கிவிடக் கூடாது.
- பாஜக-வின் முழக்கம் மாநிலத்தில் நிலவும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 20-ந்தேதி நடைபெற இருக்கும் நிலையில் பாஜக தலைவர்கள், இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பிரதமர் மோடி தனது பிரசாரத்தில் ஜார்க்கண்டின் மண், மக்கள், உணவு (Mati, Beti, Roti) ஆகியவற்றை பா.ஜ.க. காப்பாற்றும் என்ற கோஷத்தை கூறி வருகிறார்.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோர்ன் இன்று இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளரும், மந்திரியுமான தீபிகா பாண்டே சிங்கை ஆதித்து பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பா.ஜ.க., Mati, Beti and Roti கோஷத்தை அரசியல் ஆதாயத்திற்காக மக்களை தவறாக வழிநடத்துகிறது என்றார்.
பா.ஜ.க.-வின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு வாக்காளர்கள் மயங்கிவிடக் கூடாது. பாஜக-வின் முழக்கம் மாநிலத்தில் நிலவும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டது. இது பதட்டத்தைத் தூண்டுவதற்கு அக்கட்சியின் தவறான முயற்சி.
மிகப்பெரிய வெற்றியை பெற இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மாநிலத்தை சீர்குலைக்கவும், ஒற்றுமையை சீர்குலைக்கவும் கடந்த ஓராண்டாக பாஜக சதி செய்து வருகிறது.
ஜார்க்கண்ட் மக்கள் நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல் ஒன்றாக பண்டிகைகளை கொண்டாடுகின்றனர். மேலும் இந்த உணர்வு தொடர இந்தியா கூட்டணி வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் திருவிழாக்கள் வரும், ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்கள் வரும் என்று ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.