இந்த நாடு ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமானது-அதானி, அம்பானிக்கு அல்ல: ராகுல் காந்தி
- குடிமக்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை வழங்குவது அரசாங்கத்தின் பணி.
- அரசியலமைப்பில் எழுதப்பட்டதை நாங்கள் செய்கிறோம் என்றார் ராகுல் காந்தி.
மும்பை:
மகாராஷ்டிர மாநில சட்டசபைத் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. அங்கு பா.ஜ.க. [மகாயுதி] கூட்டணிக்கும், காங்கிரசின் மகா விகாஸ் அகாடி இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திராபூர் பகுதியில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டின் குடிமக்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை வழங்குவது அரசாங்கத்தின் பணி என்று அரசியலமைப்பில் எழுதப்பட்டுள்ளது.
அதில் எழுதப்பட்டதை நாங்கள் செய்கிறோம். செல்வம் பகிர்ந்தளிக்கப்பட்டால் அனைவருக்கும் சமமாக வழங்கப்படும் என்று அதில் எழுதப்பட்டுள்ளது.
அரசியலமைப்பில் எழுதப்பட்ட முதல் வரி இந்த நாடு ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமானது. அதன் முதல் வரி இந்த நாடு அதானி, அம்பானிக்கு சொந்தம் என்பது அல்ல என தெரிவித்தார்.