இந்தியா

காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான சுரேஷ் பச்சோரி பா.ஜனதாவில் இணைந்தார்

Published On 2024-03-09 07:12 GMT   |   Update On 2024-03-09 07:12 GMT
  • நான்கு முறை மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.
  • மத்திய இணை மந்திரியாகவும் இருந்துள்ளார்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த அரசியல் தலைவரான சுரேஷ் பச்சோரி பா.ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். இவர் முன்னாள் மத்திய மந்திரியாக இருந்துள்ளார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பாதுகாப்பு துறையின் இணை மந்திரியாக இருந்துள்ளார். மேலும், நான்கு முறை மாநிலங்களை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவருடன் முன்னாள் எம்.பி. கஜேந்திர சிங் ராஜுகெதி, முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் (சஞ்சய் சுக்லா, அர்ஜுன் பாலியா, விஷல் பட்டேல்) மற்றும் பலர் இன்று பா.ஜனதாவில் இணைந்தனர்.

காந்தி குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் பச்சோரி. காங்கிரஸ் கட்சியில் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் குழுவில் உள்ள ஒரு நபராக இருந்தவர். மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தபோது சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். அம்மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார்.

முன்னாள் எம்.பி. ராஜுகெதி பழங்குடியினத்தின் முக்கிய தலைவர் ஆவார். இவர் தார் (பழங்குடியின தொகுதி) தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் 1998, 1999 மற்றும் 2009-ல் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர். இவர் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்னதாக 1990-ல் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News