இந்தியா (National)

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சத்தீஸ்கர் சிறுவன் கைது

Published On 2024-10-16 14:39 GMT   |   Update On 2024-10-16 14:39 GMT
  • வெடிகுண்டு மிரட்டலால் 12 விமானங்களும் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
  • வெடிகுண்டு மிரட்டல்கள் அனைத்தும் புரளி என்று பின்னர் தெரிய வந்தன.

கடந்த 3 நாட்களில் இந்தியாவில் 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெடிகுண்டு மிரட்டலால் 12 விமானங்களும் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர். பின்னர் இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் அனைத்தும் புரளி என்று பின்னர் தெரிய வந்தன.

வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சத்தீஸ்கரை சேர்ந்த 2 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதில் ஒருவர் பெயர் நிர்பன் ஃபஸ்லுதீன் (33) என்றும் இன்னொரு நபர் 17 வயதான சிறுவன் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த சிறுவன் கைது செய்யப்பட்ட ஃபஸ்லுதீனின் எக்ஸ் கணக்கை ஹேக் செய்து சமூக வலைத்தளங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் மும்பை விமான கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவன் சிறார் சிறைக்கு அடைக்கப்பட்டான். வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக ஃபஸ்லுதீனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News