இந்தியா (National)

சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் புதிய சுதந்திர தேவி சிலை: தலைமை நீதிபதி திறந்து வைத்தார்

Published On 2024-10-16 17:52 GMT   |   Update On 2024-10-16 17:52 GMT
  • சுப்ரீம் கோர்ட் நூலகத்தில் தலைமை நீதிபதி டி.ஓ. சந்திரசூட் இந்த சிலையை திறந்துவைத்தார்.
  • சட்டம் குருடு அல்ல என்ற வாசகத்துடன் புதிய நீதி தேவதை சிலை அமைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட் நூலகத்தில் நடந்த விழாவில் புதிய நீதி தேவதை சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று திறந்து வைத்தார்.

இப்புதிய நீதிதேவதை சிலை, சட்டம் குருடு அல்ல என்பதையும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்தவே கறுப்பு துணி அகற்றப்பட்டுள்ளது.

இடது கையில் தராசுக்கு பதிலாக அரசியல் சாசன புத்தகம் உள்ளது.

ஏற்கனவே இருந்த நீதி தேவி சிலையில், அதன் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டும், இடது கையில் தராசு, வலது கையில் வாளும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News