இந்தியா (National)

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் செயல்பாடு மிகவும் கவலை அளிக்கிறது: சி.பி.எம்.

Published On 2024-10-16 16:14 GMT   |   Update On 2024-10-16 16:14 GMT
  • நேரடியாக இந்தியாவில் தேசிய பாதுகாப்பை பாதிக்கிறது.
  • தேசிய நலனைப் பாதுகாப்பதில் இந்திய அரசு கடமைப்பட்டுள்ளது.

இந்தியா எதிர்ப்பு காலிஸ்தான் அமைப்பின் ஆதரவு பெற்ற சிறு குழுக்கள் கனடாவில் செயல்பட்டு வருகிறது. காலிஸ்தான் தலைவர் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான ராஜாங்க ரீதியிலான நட்பு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளும் தூதர்களை திருப்பி அனுப்பும் நடிவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் கனடாவில் காலிஸ்தான் செயல்பாடுகள் இந்தியாவுக்கு மிகவும் கவலை அளிக்கக்கூடிய விசயம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் "கனடாவில் இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் அமைப்பின் ஒரு பகுதியினரின் செயல்பாடுகள் மிகவும் கவலை அளிக்கக்கூடிய விசயம். இது நேரடியாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பை பாதிக்கிறது. தேசிய நலனைப் பாதுகாப்பதில் இந்திய அரசு கடமைப்பட்டுள்ளது. இதற்கு இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் முழுவதும் ஆதரவு உள்ளது.

இந்தியாவுக்கு எதிராக கனடா அரசின் பல்வேறு அதிகாரப்பூர்வ அதிகாரிகளால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை இந்திய அரசு நிராகரித்துள்ளது. லாரன்ஸ் பிஷ்னாய் கிரிமினல் கும்பலின் பங்கு உள்பட இந்த விவகாரங்களில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை இந்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுடுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News