இந்தியா

தீபாவளி முதல் பெண்களுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்- சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

Published On 2024-10-22 08:25 GMT   |   Update On 2024-10-22 08:25 GMT
  • ‘தீபம்' திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை செய்தார்.
  • சிலிண்டர்களை இலவசமாக வழங்குவதால், அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த கூடுதல் சுமை ரூ.13,423 கோடியாக இருக்கும்.

திருப்பதி:

ஆந்திராவில் ஆண்டுதோறும் பெண்களுக்கு 3 இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். இந்த திட்டத்திற்கு தீபம் என பெயரிட்டார்.

வருகிற தீபாவளி பண்டிகை முதல் பெண்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

இது பெண்கள் நலனை ஆதரிப்பது மற்றும் வீட்டுச் செலவுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

'தீபம்' திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை செய்தார்.

"பெண்கள் கியாஸ் சிலிண்டர்களுக்காக செலவழித்த பணத்தை மற்ற வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தலாம், " என்று அவர் கூறினார்.

சிலிண்டர்களை இலவசமாக வழங்குவதால், அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த கூடுதல் சுமை ரூ.13,423 கோடியாக இருக்கும். சராசரியாக ஆண்டுக்கு ரூ.2,684 கோடி செலவாகும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News