இந்தியா

ஏழுமலையான் ஏற்கமாட்டார்: சந்திரபாபு நாயுடு உயிருக்கு ஆபத்து என வதந்தி- வாலிபர் மீது வழக்குப்பதிவு

Published On 2024-10-13 04:47 GMT   |   Update On 2024-10-13 04:47 GMT
  • திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் இதுகுறித்து திருப்பதி மலையில் உள்ள போலீசில் புகார் செய்தனர்.
  • போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சைதன்யா மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆந்திர மாநில அரசு சார்பில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோர் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தனர்.

சந்திரபாபு நாயுடு சாமிக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கும் வீடியோவை சைதன்யா என்ற வாலிபரும் அவரது நண்பர்களும் தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டனர்.

அந்த பதிவில் சந்திரபாபு நாயுடு சமர்ப்பித்த பட்டு வஸ்திரங்களை ஏழுமலையான் ஏற்றுக்கொள்ள மாட்டார். எனவே அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என தங்களது பதிவில் தெரிவித்து இருந்தனர்.

இதனை அறிந்த திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் இதுகுறித்து திருப்பதி மலையில் உள்ள போலீசில் புகார் செய்தனர்.

புகாரில் ஏழுமலையானின் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்திய சைதன்யா மற்றும் அவரது நண்பர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சைதன்யா மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News