இந்தியா

ராட்சத பல்லியை வெறும் கைகளால் பிடித்த பெண்

Published On 2024-11-23 09:35 GMT   |   Update On 2024-11-23 09:35 GMT
  • வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அஜிதா பாண்டேவை பாராட்டினர்.
  • சில பயனர்கள், பாதுகாப்பு கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தினர்.

சத்தீஸ்கரின் பிளாஸ்பூரை சேர்ந்த பெண் ஒருவர் ராட்சத பல்லி ஒன்றை வெறும் கைகளால் பிடித்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மானிட்டர் பல்லி எனப்படும் ஆப்ரிக்க, ஆசிய இனத்தை சேர்ந்த ராட்சத பல்லி ஒரு வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்தது.

இதைப்பார்த்த அந்த குடும்பத்தினர், விலங்கு நல ஆர்வலரான அஜிதா பாண்டேவுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த அவர், ஒரு கம்பியை பயன்படுத்தி தண்ணீர் தொட்டியின் ஓரத்திற்கு அந்த பல்லியை இழுத்தார். பின்னர் தனது கைகளால் பல்லியின் வாலை பிடித்து வெளியே இழுத்தார். அப்போது அந்த பல்லி 2 முறை அஜிதாவை கடிக்க முயன்றது.

ஆனாலும் அவர் பிடியை விடாமல் தைரியத்துடன் அந்த பல்லியை மீட்டு வெளியே கொண்டு வந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அஜிதா பாண்டேவை பாராட்டினர். சில பயனர்கள், பாதுகாப்பு கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தினர்.

Tags:    

Similar News