இந்தியா

ஜனாதிபதியை சந்திக்கும் தேர்தல் ஆணையர்கள்

Published On 2024-06-06 05:23 GMT   |   Update On 2024-06-06 05:23 GMT
  • மோடி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்து ஜனாதிபதியிடம் கடிதத்தை ஒப்படைத்தார்.
  • வரும் 8-ந்தேதி புதிய ஆட்சி பொறுப்பேற்கும் என்று கூறப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. இதில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 296 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 240 இடங்களை கைப்பற்றியுள்ளது.

இதையடுத்து எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆட்சி அமைய உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கு ஏதுவாக மோடி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்து ஜனாதிபதியிடம் கடிதத்தை ஒப்படைத்தார். ஜனாதிபதியும் மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார். மேலும் புதிய ஆட்சி பொறுப்பேற்கும் வரை காபந்து பிரதமராக நீடிக்கும் படி ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். இதையடுத்து வரும் 8-ந்தேதி புதிய ஆட்சி பொறுப்பேற்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜனாபதிபதி திரெளபதி முர்முவை இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நேரில் சந்திக்க உள்ளனர். அப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் விரிவான பட்டியலை வழங்க உள்ளனர். அதன் பிறகு ஆட்சி அமைக்க வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுப்பார்.

Tags:    

Similar News