இந்தியா

டெல்லி, மும்பை டுவிட்டர் அலுவலகங்கள் மூடல்

Published On 2023-02-18 02:40 GMT   |   Update On 2023-02-18 02:40 GMT
  • சுமார் 7 ஆயிரத்து 500 பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்தார்.
  • முன்னணி நிர்வாகிகளை அதிரடியாக வேலையை விட்டு நீக்கினார்.

புதுடெல்லி :

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை கையகப்படுத்தினார். பின்னர், அதில் பணிபுரிந்த முன்னணி நிர்வாகிகளை எலான் மஸ்க் அதிரடியாக வேலையை விட்டு நீக்கினார். டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் உள்பட 4 முக்கிய உயர் அதிகாரிகளையும், பணியாளர்கள் சுமார் 7 ஆயிரத்து 500 பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்தார். இவரது அதிரடி நடவடிக்கைகள் சர்ச்சைக்குள்ளானது.

இந்த நிலையில், இந்தியாவில் செயல்பட்டு வந்த 3 டுவிட்டர் அலுவலகங்களில் டெல்லி, மும்பையில் உள்ள தனது அலுவலகங்களை டுவிட்டர் நிறுவனம் மூடியுள்ளது. பெங்களூரு அலுவலகம் மட்டும் தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூடப்பட்டுள்ள 2 அலுவலகங்களில் பணியாற்றியவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய எலான் மஸ்க் அறிவுறுத்தியுள்ளார். செலவை குறைக்கும் நடவடிக்கையாக 3 அலுவலகங்களில் இரண்டை மூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News