மீட்கப்பட்ட முதல் தொழிலாளியுடன் பேசிய முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி
- மீட்புப் பணிகளை முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று பார்வையிட்டார்.
- மீட்கப்பட்டவர்களிடம் மாநில முதல் மந்திரி கலந்துரையாடினார்.
உத்தரகாசி:
உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்துவந்தது.
கடந்த 12-ம் தேதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து இன்று 17-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி நிறைவடைந்தது. தொழிலாளர்களை மீட்க தயார் நிலையில், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழுவினர் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, தொழிலாளர்களின் உறவினர்கள் சுரங்கத்தில் குவிந்தனர்.
இதற்கிடையே, முதல் கட்டமாக 5 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட உள்ளது. மற்றவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மீட்புப் பணிகளை முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று பார்வையிட்டார். மீட்கப்பட்டவர்களிடம் முதல் மந்திரி கலந்துரையாடினார்.
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue: CM Pushkar Singh Dhami meets the workers who have been rescued from inside the Silkyara tunnel. pic.twitter.com/5gZHyuhrqF
— ANI (@ANI) November 28, 2023