பிணங்களையும் விட்டு வைக்காத பா.ஜ.க. - ராகுல் காந்தி கடும் தாக்கு
- மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
- தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படுகிறது.
போபால்:
தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் தேதிகளுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி அன்று சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படுகிறது.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஷாடோல் நகருக்கு பிரசாரத்தில் பங்கேற்கச் சென்றார்.
அப்போது அவர் பேசுகையில், பா.ஜ.க. ஆய்வகத்தில் இறந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களின் பணம் திருடப்படுகிறது. இது இந்தியாவில் வேறு எங்கும் நடக்காது, மத்திய பிரதேசத்தில்தான் நடக்கும்.
இன்று ஆதிவாசிகளுக்கு என்ன உரிமைகள் வழங்க வேண்டும், ஓபிசி, எஸ்.டி. பிரிவினருக்கு என்ன பங்கு கொடுக்க வேண்டும்? இதுதான் நாட்டின் முன் உள்ள கேள்வி, அதனால்தான் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என பேசுகிறோம் என தெரிவித்தார்.