இந்தியா
மத்திய பிரதேசம் சட்டசபை தேர்தல் - தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்
- மத்திய பிரதேசம் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ளது.
- அங்கு ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ், பாஜக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
போபால்:
மத்திய பிரதேசம் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. ஆட்சியைக் கைப்பற்றுவதில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இதற்கிடையே, 230 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில், தலைநகர் போபாலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல் மந்திரியும், மாநில தலைவருமான கமல்நாத் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.
500 ரூபாய்க்கு கியாஸ் சிலிண்டர், பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது, வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்பட பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது.