இந்தியா

6 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் 180 வேட்பாளர்கள் மீது குற்றவழக்குகள் - அதிர்ச்சி அறிக்கை

Published On 2024-05-16 10:46 GMT   |   Update On 2024-05-16 10:46 GMT

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் நாட்டில் உள்ள பல்வேறு தொகுதிகளில் 4 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வரும் மே 20 ஆம் தேதி பிகார், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொகுதிகளில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அதனையடுத்து மே 25 ஆம் தேதி உத்தரப் பிரதேசம், ஹரியானா, பிகார், மேற்கு வங்கம், டெல்லி, ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள மங்களவைத் தொகுதிகளில் 6 ஆம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 6 ஆம் கட்ட தேர்தலில் மொத்தம் 57 தொகுதிகளில் பலவேறு காட்சிகளை சார்ந்தும், சுயேட்சையாகவும் சுமார் 869 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் ஜனநாயக சீர்திருந்த சங்கம் இன்று (மே 16) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைப் படி 6 ஆம் கட்ட தேர்தலில் போட்டியிடும் பெரிய காட்சிகளை சேர்த்த 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதில் 141 வேட்பாளர்கள் மீது கடுமையாக குற்ற வழக்குகள் உள்ளன.

 

இதில் மொத்தமாக 56 பாஜக வேட்பாளர்களில் 28 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. மேலும் 25 காங்கிரஸ் வேட்பாளர்களில் 8 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜவாதி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சி வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. மேலும் 869 பேரில் 366 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. பாஜகவில் 48 பேரும், காங்கிரஸில் 20 வேட்பாளர்களும் கோடீஸ்வரர்களாக உள்ளனர். 

Tags:    

Similar News