சீதாராம் யெச்சூரி மறைவு- தலைவர்கள் இரங்கல்
- சீதாராம் யெச்சூரிக்கு செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
- சீதாராம் யெச்சூரி மறைவுக்கு ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.
இந்நிலையில், சீதாராம் யெச்சூரி மறைவுக்கு ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், " சீதாராம் யெச்சூரி எனது நண்பர். நம் நாட்டின் மீது தெளிவான புரிதல் கொண்டவர், அதன் கொள்கையை காப்பாற்ற நினைப்பவர். நமது நீண்ட உரையாடல்களை மிஸ் செய்வேன்.
இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்," சீதாராம் யெச்சூரி காலமானார் என்பதை அறிந்து வருந்துகிறேன். மூத்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவரை நான் அறிவேன். அவருடைய மறைவு தேசிய அரசியலுக்கு இழப்பாகும்.
அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
"திமுக தலைவர்கள் மீது அதிக பாசம் கொண்டவர் சீதாராம் யெச்சூரி. தமிழ் சிறப்பாக பேச கூடியவர் சீதாராம் யெச்சூரி. என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
"சீதாராம் யெச்சூரி மறைவு வருத்தம் அளிக்கிறது" என்றார்.