இந்தியா (National)

காற்று மாசால் மூச்சுத் திணறும் டெல்லி.. ரசாயனமாக மாறிய யமுனை நதி - வீடியோ

Published On 2024-10-18 12:10 GMT   |   Update On 2024-10-18 12:10 GMT
  • டெல்லியின் காற்று மாசு அளவு 293 என்ற மோசமான நிலைக்கு வந்துள்ளது.
  • தோல் மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

காற்று மாசு பிரச்னையால் திணறி வரும் தலைநகர் டெல்லியின் சூழல் நாளுக்குநாள் கடுமையாகி வருகிறது. இன்றைய தினம் [வெள்ளிக்கிழமை] டெல்லியின் காற்று மாசு அளவு 293 என்ற மோசமான நிலைக்கு வந்துள்ளது. டெல்லியில் பாயும் யமுனை நதியில் பனிப்படலம் போன்று ரசாயனங்கள் நுரைகளாக உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. காலிந்தி கஞ்ச் பகுதியில் உள்ள யமுனை ஆற்றில் காணப்பட்ட இந்த காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நீரில் உருவாகியுள்ள நுரையில் அமோனியா மற்றும் பாஸ்பேட் அளவு அதிகம் உள்ளதால் மக்களின் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் தோல் மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே காற்று மாசு காரணமாக பாஜக செய்தி தொடர்பாளர் பூனாவாலா கேஸ் மாஸ்க் அணிந்து ஊடகத்துக்கு பேட்டியளித்த வீடியோவும் வைரலாகி வருகிறது. காற்று மாசை தடுக்க கடந்த டெல்லியில் பட்டாசு வெடிக்க முழுமையான தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News