எழுத்தாளர் அருந்ததி ராய் மீது பாய்கிறது உபா சட்டம்
- குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(3) இன் கீழ் டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
- சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் பிரிவு 45 (1)ன் கீழ் வழக்கு தொடர டெல்லி துணை நிலை அனுமதி அளித்துள்ளார்.
புதுடெல்லி:
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமைதியைச் சீர்லைக்கும் வகையில் பேசியதாக, பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் முன்னாள் பேராசிரியர் ஷேக் ஷௌகத் ஹுசைன் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (உபா) கீழ் வழக்குத் தொடர டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.
காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் பகுதியாக இருந்தது இல்லை என்றும், இந்தியாவின் ஆயுதப் படைகளால் வலுக்கட்டாயமாக அது ஆக்கிரமிக்கப்பட்டது என்றும், இந்தியாவில் இருந்து ஜம்மு காஷ்மீர் சுதந்திரம் பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜீலானியும் அருந்ததி ராயும் மாநாட்டில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த ஆர்வலர் சுஷில் பண்டிட் புகார் அளித்துள்ளார். குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(3) இன் கீழ் டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
இதை தொடர்ந்து "இந்த வழக்கில் அருந்ததி ராய் மற்றும் காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத்தின் முன்னாள் சர்வதேச சட்டப் பேராசிரியர் டாக்டர் ஷேக் ஷோகத் ஹுசைன் ஆகியோர் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் பிரிவு 45 (1)ன் கீழ் வழக்கு தொடர டெல்லி துணை நிலை அனுமதி அளித்துள்ளார்.
அந்த மாநாட்டில் அருந்ததி ராய், ஷேக் ஷௌகத் ஹுசைனை தவிர ஹுரியத் தலைவர் சையத் அலி ஷா கிலானி, எஸ்.ஏ.ஆர். ஜீலானி ஆகியோர் கலந்து கொண்டனர்.