இந்தியா (National)

அதுவரை உயிரோடு இருப்பேன்... கார்கேயின் பேச்சு அவமானகரமானது- அமித் ஷா

Published On 2024-09-30 07:04 GMT   |   Update On 2024-09-30 07:04 GMT
  • பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்கும் வரை உயிரை விடமாட்டேன்.
  • காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பிரதமர் மோடி மீது எவ்வளவு வெறுப்பு வைத்துள்ளனர் என்பதை காட்டுகிறது- அமி்த் ஷா

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பாக இருக்கையில் அமரவைக்கப்பட்டார். முதலுதவி பெற்றதும் உடல்நிலை சரியானது.

பின்னர் மீண்டும் பேசத் தொடங்கினார். அப்போது பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்கும் வரை உயிரை விடமாட்டேன் எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில் அதுவரை உயிரோடு இருப்பேன் என கார்கே கூறியது அவமானகரமானது, அருவருப்பானது என அமித் ஷா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அமித் ஷா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தனது பேச்சியின் மூலம் முற்றிலும் வெறுப்பாகவும், அவமானமாகவும் இருப்பதில் தன் தலைவர்களையும், கட்சியையும் விட சிறப்பாக செயல்பட்டார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பிரதமர் மோடி மீது எவ்வளவு வெறுப்பு வைத்துள்ளனர். எவ்வளவு பயப்படுகிறார்கள் என்பதை காட்டுகிறது. அவர்கள் பிரதமர் மோடியை பற்றி யோசித்து கொண்டிருக்கிறார்கள். கார்கேயின் உடல் தொடர்பாக, அவர் நீண்ட ஆயுட்காலம் ஆரோக்கியத்துடன் இருக்க பிரதமர் மோடி, நான் மற்றும் நாம் வேண்டிக்கொள்கிறோம். அவர்கள் நீண்ட காலம் வாழட்டும். 2047-ல் விக்சித் பாரத் உருவாவதை காணும் வகையில் வாழட்டும்.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மல்லிகார்ஜூன கார்கேயிடம் தொலைபேசி மூலம் உடல்நலம் குறித்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News