இந்தியா (National)

உச்சநீதிமன்றம் ஒன்னும் காபி ஷாப் கிடையாது.. 'யா' போட்டு பேசிய வக்கீலை கிழித்தெடுத்த தலைமை நீதிபதி

Published On 2024-09-30 08:12 GMT   |   Update On 2024-09-30 08:12 GMT
  • என்ன இது யா யா, இந்த யா யா எல்லாம் எனக்கு அலர்ஜி என்று கோபமாக பேசியுள்ளார்
  • பொது நல மனுவில் ரஞ்சன் கோகாய் பெயரை குறிப்பிட்டது தலைமை நீதிபதியையே எதிர்ப்பதாகிறது

உச்சநீதிமன்றம் ஒன்றும் காபி ஷாப் இல்லை என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வக்கீலுக்கு பாடம் எடுத்த சம்பவம் நிகழ்ச்த்துள்ளது. இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் வக்கீல் ஒருவருடன் சட்டப்பிரிவு 32 இந்த கீழ் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு ஒன்றின் மீது சந்திரசூட் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

2018 தேதியுடைய அந்த மனுவில் அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் பெயரை அந்த வக்கீல் குறிப்பிட்டுள்ளார். அதாவது, 2018 இல் இந்த வக்கீல் வாதாடிய அந்த பொதுநல வழக்கை அப்போதைய நீதிபதி ரஞ்சன் கோகாய் தள்ளுபடி செய்துள்ளார். ஆனால் அந்த மனுவில் எந்த தவறும் இல்லை என்பதால் அதை தள்ளுபடி செய்திருக்கக்கூடாது என்று தற்போது மீண்டும் அந்த வக்கீல் உச்சநீதிமன்றத்தில் மறுபரிசீலனை மனுவை சமர்ப்பித்துள்ளார். எனவே அதில் ரஞ்சன் கோகாய் பெயரை வக்கீல் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பொது நல மனுவில் ரஞ்சன் கோகாய் பெயரை குறிப்பிட்டது தலைமை நீதிபதியையே எதிர்ப்பதாகிறது என்று சந்திரசூட் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துப் பேசிய வக்கீல், சாதாரணமாகப் பேசுவதுபோல், 'யா [Yeah] யா [Yeah], அப்போதைய நீதிபதி ரஞ்சன் கோகாய்... மறுபரிசீலனை மனு..' என்று இழுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சந்திரசூட், உடனே அந்த வக்கீலை இடைமறித்து, 'இது ஒன்றும் காபி ஷாப் கிடையாது, என்ன இது யா யா, இந்த யா யா எல்லாம் எனக்கு அலர்ஜி, இதற்கு இங்கு அனுமதி கிடையாது' என்று கோபமாகக் கடிந்துகொண்டார். இதனால் நீதிமன்ற அவையே சற்று நேரம் சற்று நேரம் அமைதியில் மூழ்கியது.

Tags:    

Similar News