இந்தியா

கார் ஸ்டியரிங்கில் மறைத்து போதைப்பொருள் கடத்தல்: மாணவர்கள் கைது

Published On 2024-07-25 07:16 GMT   |   Update On 2024-07-25 07:16 GMT
  • கேரளவில் போதை பொருட்கள் அதிகளவில் புழக்கத்தில் இருக்கிறது.
  • காரில் இருந்த போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் போதை பொருட்கள் அதிகளவில் புழக்கத்தில் இருக்கிறது. அதிலும் விலை உயர்ந்த போதை பொருளான எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் போலீசாரின் சோதனையில் அடிக்கடி சிக்கி வருகிறது.

இதனை பயன்படுத்துவம், பதுக்குவதும் சட்டப்படி குற்றம் என்றபோதிலும் பலர் விற்பனையில் ஈடுபடுகிறார்கள்.

எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று மானந்தவாடி அருகே உள்ள பாவாலி சோதனைச் சாவடியில் கலால் புலனாய்வு பிரிவினர் மற்றும் சிறப்பு படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக பெங்களூருவில் இருந்து வந்த காரை நிறுத்தி, காரில் இருந்தவர்களிடம் விசா ரணை நடத்தினர். அப்போது அவரகள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகம் அடைந்த கல்ல புலனாய்வு பிரிவினர் காரில் சோதனை செய்தார்கள். அப்போது காரின் ஸ்டியரிங் 'செலோடேப்' ஒட்டப்பட்டு வித்தியாசமாக இருந்தது.

அதனை பிரித்து பார்த்தபோது அதற்குள் எம்.டி.எம்.ஏ. போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை காரில் கடத்தி வந்த பெங்களூரு நர்சிங் மாணவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் போதைப்பொ ருளை பெங்களூருவில் இருந்து கார் ஸ்டியரிங்கில் மறைத்துவைத்து நூதனமுறையில் கடத்தி கொண்டு வந்திருக்கின்றனர். ஆனால் அதனை கலால் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்து கைப்பற்றி விட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளின் மதிப்பு பல லட்சம் ஆகும்.

அவர்கள் பெங்களூ ருவில் இருந்து கொண்டு வரப்பட்ட போதைப்பொ ருளை கூடுதல் விலைக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கொண்டுவந்தது விசார ணையில் தெரியவந்திருக்கி றது. கைது செய்யப்பட்ட நர்சிங் மாணவர்கள் உள்பட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News