இந்தியா

6 நாட்களில் 1,03,308 வாகனங்களுக்கு இ-பாஸ்: நீலகிரி மாவட்ட நிர்வாகம்

Published On 2024-05-11 15:58 GMT   |   Update On 2024-05-11 15:58 GMT
  • வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்றுவரும் நடைமுறை கடந்த 7-ந் தேதி முதல் அமல்.
  • 7,575 வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று 38,116 பேர் நீலகிரிக்குச் சென்றுள்ளனர்.

நீலகிரிக்கு ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதால், அங்கு கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பசுமையான சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி, நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விவரங்களையும், பயணிக்கும் வாகனங்களின் எண்களையும் அவர்கள் வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து விண்ணப்பித்து இ-பாஸ் பெற்று அந்த அடிப்படையில் வாகனங்களும், சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கின்றனர்.

இதனை பரிசாத்த முறையில் நடைமுறைப்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்றுவரும் நடைமுறை கடந்த 7-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதையடுத்து நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இ-பாஸ் பெற்றே வருகின்றனர்.

இந்நிலையில், நீலகிரி செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், 6 நாட்களில் 1,03,308 வாகனங்களுக்கு இ-பாஸ் ழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்று மட்டும் (இரவு 8 மணி வரை) 7,575 வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று 38,116 பேர் நீலகிரிக்குச் சென்றுள்ளனர்.

Tags:    

Similar News