இந்தியா

தேர்தல் பத்திரம் விவகாரம் பா.ஜனதாவுக்கு பின்னடைவா?- பிரதமர் மோடி பதில்

Published On 2024-04-01 02:57 GMT   |   Update On 2024-04-01 04:41 GMT
  • பணம் யார் கொடுத்தது. யார் வாங்கினார்கள். எப்போது கொடுத்தது. எல்லா விவரங்களும் கிடைக்கிறது.
  • தேர்தல் பத்திரத்தில் சில குறைபாடுகள் உள்ளன. எல்லா விசயங்களும் முழுமையாக இல்லை.

பிரதமர் மோடி தந்தி டி.வி.க்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். தேர்தல் பத்திரம் மிகப்பெரிய ஊழல் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

தேர்தல் பத்திரம் விவாகரம் பா.ஜனதா கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரதமர் மோடி அளித்த பதில் பின்வருமாறு:-

இந்த விவாகரத்தில் நான் என்ன செய்து விட்டேன். எதனால் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது என சொல்லுங்கள். இதற்காக இவர்கள் (எதிர்க்கட்சிகள்) எல்லோரும் சந்தோசப்பட்டு ஆடுகிறார்கள். இவர்கள் எல்லோரும் துன்பம்தான் படப்போகிறார்கள்

இந்த புத்திசாலிகளிடம் கேட்கிறேன். 2014-க்கு முன் எத்தனை தேர்தல் நடந்துள்ளது. அத்தனை தேர்தல்களிலும் எவ்வளவு செலவு ஆகியிருக்கும். அந்த பணம் எங்கிருந்து வந்தது? யாருக்கு கொடுக்கப்பட்டது என்று எந்த நிறுவனமாவது சொல்ல முடியுமா?.

தற்போது மோடி வந்து தேர்தல் பத்திரத்தை உருவாக்கிவிட்டார். அதனால் உங்களால் தேட முடிகிறது. பணம் யார் கொடுத்தது. யார் வாங்கினார்கள். எப்போது கொடுத்தது. எல்லா விவரங்களும் கிடைக்கிறது. தேர்தல் பத்திரத்தில் சில குறைபாடுகள் உள்ளன. எல்லா விசயங்களும் முழுமையாக இல்லை. சில குறைகளை தீர்த்துவிட்டால், தேர்தல் பத்திரத்தில் நன்மைகள் கிடைக்கும்.

Tags:    

Similar News