இலவச மின்சாரம் என்ற பேச்சுக்கே இடமில்லை: நிதிஷ் குமார் திட்டவட்டம்
- சில மாநிலங்களில் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
- தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் கூட, இது ஒவ்வொருவருடைய பாதுகாப்பாக இருக்கும்.
பீகார் மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைத்து ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் ஆட்சி செய்து வருகிறார். தற்போது பீகார் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.
சட்டமன்றத்தில் பேசும்போது இலவச மின்சாரம் வழங்கமாட்டோம் என நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிதிஷ் குமார் கூறியதாவது:-
மின்சாரம் இலவசமாக வழங்கப்படமாட்டாது என்பதை நான் தொடக்கத்தில் இருந்தே தெரிவித்து வருகிறேன். நாங்கள் எவ்வளவு குறைந்த விலைக்கு வழங்க முடியுமோ, அந்த அளவிற்கு வழங்குவோம். இது தொடர்ந்து பாதுகாப்பாக இருக்கும்.
சில மாநிலங்களில் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், நாங்கள் இலவசமாக வழங்கமாட்டோம். தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் கூட, இது ஒவ்வொருவருடைய பாதுகாப்பாக இருக்கும். ஆகவே, இலவசமாக வழங்கப்படமாட்டாது" என்றார்.
பீகார் எரிசக்தி மந்திரி பிஜேந்திர யாதவ் கூறுகையில் "மற்ற மாநிலங்களை காட்டிலும் பீகாரில் மின்சார கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டால், நிச்சயமாக நாங்கள் அதைவிட குறைவான விலைவில் வழங்குவோம். எவ்வளவு காலம் இந்த இலவச மின்சாரம் மூலம் இழப்பை சந்திக்க முடியும்?. பணம் எங்கிருந்து வரும்?. 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மானியம் வழங்குகிறோம். புறநகர் பகுதிகளில் அதிக அளவில் வழங்குகிறோம். தற்போது இதைவிட அதிக வாய்ப்பு தேவைப்படுகிறா?" என்றார்.