இந்தியா (National)

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி யானை பலி

Published On 2023-04-09 19:03 GMT   |   Update On 2023-04-09 19:03 GMT
  • ரெயில் ஓட்டுனர் விபத்து குறித்து ஜரபாதா நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
  • விபத்தால் ஒரு சில ரெயில்கள் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டன.

ஒடிசா மாநிலம், அங்குல் மாவட்டம், ஜார்பாடா வனப்பகுதியில் வாராந்திர சம்பல்பூர்-ஷாலிமார் மஹிமா கோசைன் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் யானை உயிரிழந்தது.

கடந்த ஏப்ரல் 6ம் தேதி அன்று இரவு போயிண்டா மற்றும் ஜரபதா நிலையங்களுக்கு இடையே வாராந்திர ரெயில் இயங்கியது. அப்போது, யானை தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிப்பட்டு உயிரிழந்ததாக கிழக்கு கடற்கரை ரெயில்வே தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, ரெயில் ஓட்டுனர் விபத்து குறித்து ஜரபாதா நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

பின்னர், வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்று யானையின் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவத்தால் ஒரு சில ரெயில்கள் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டன.

யானை இறந்த சம்பவத்தை ரெயில்வே துறை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும் மற்றும் நிர்வாகத்தின் உயர் மட்டத்தில் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தது.

Tags:    

Similar News