இந்தியா
ஜம்மு காஷ்மீரில் முதல் சர்வதேச மாரத்தான்.. 2 மணி நேரத்தில் 21 கி.மீ. ஓடிய உமர் அப்துல்லா - வீடியோ
- உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபல தடகள வீரர்கள் கலந்துகொண்டனர்
- பயிற்சி எதுவும் இன்றி அப்துல்லா ஓடத் தொடங்கினார்
ஜம்மு-காஷ்மீரில் முதல் முறையாக சர்வதேச மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபல தடகள வீரர்கள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர்.
இந்த மாரத்தான் போட்டியை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கொடியசைத்து தொடங்கி வைத்து அதில் பங்கேற்றுள்ளார். பயிற்சி எதுவும் இன்றி ஓடத் தொடங்கிய அவர், கிலோ மீட்டருக்கு 5 நிமிடங்கள் 54 வினாடிகள் என்ற சராசரி வேகத்தில் 21 கி.மீ. ஓடி சாதனை படைத்தார்.
அப்துல்லா ஓடும்போது அவரது குடும்பத்தினர் மற்றும் சக வீரர்கள் உற்சாகப்படுத்தி ஊக்கம் அளித்தனர். இதற்கு முன்பு 13 கி.மீ.க்கு மேல் ஓடியதில்லை என்று தெரிவித்த அப்துல்லா தனது எக்ஸ் தளத்தில் அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.