இந்தியா
உ.பி.யில் ரூ.500 லஞ்சம் கொடுக்காததால் பாஸ்போர்ட்டை கிழித்த தபால்காரர் - வீடியோ
- பாஸ்போர்ட் கொடுப்பதற்கு தபால்காரர் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார்.
- பாதிக்கப்பட்ட நபர் தபால்காரருக்கு எதிராக போலீசில் புகார் அளித்தார்.
உத்தரபிரதேசத்தில் ரூ.500 லஞ்சம் கொடுக்க மறுத்ததால், ஒருவரின் பாஸ்போர்ட்டின் முக்கிய பக்கத்தை தபால்காரர் கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒருவருக்கு பாஸ்போர்ட் தபாலில் வந்துள்ளது. ஆனால் பாஸ்போர்ட் கொடுப்பதற்கு தபால்காரர் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் தபால்காரருக்கும் சம்பந்தப்பட்ட நபருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தபால்காரர் பாஸ்போர்ட்டின் முக்கிய பக்கத்தை கிழித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட நபர் தபால்காரருக்கு எதிராக போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும், தபால்காரர் ஒவ்வொரு தபால் கொடுப்பதற்கும் ரூ.100 ரூபாய் லஞ்சம் வாங்குவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.