இந்தியா

பிரகாஷ் சிங் பாதல்

பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி பிரகாஷ் சிங் மறைவு - 2 நாள் தேசிய துக்க தினம் அறிவிப்பு

Published On 2023-04-26 00:46 GMT   |   Update On 2023-04-26 00:46 GMT
  • பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி பிரகாஷ் சிங் பாதல் நேற்று காலமானார்.
  • அவரது மறைவை அடுத்து, 2 நாள் தேசிய துக்க தினம் கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி:

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி மற்றும் அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரான பிரகாஷ் சிங் பாதல் (95), சில நாட்களாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன் மொகாலியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி பிரகாஷ் சிங் பாதல் மறைவை அடுத்து, நாடு முழுவதும் 2 நாள் தேசிய துக்க தினம் கடைப்பிடிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News