இந்தியா

ஆளுநர் மாளிகை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது: கர்நாடக மந்திரி பரமேஷ்வரா

Published On 2024-08-17 09:18 GMT   |   Update On 2024-08-17 11:17 GMT
  • மேலிடத்தில் இருந்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது இதன் மூலம் தெளிவாகிறது.
  • சட்டப்பூர்வமாக இதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

முடா முறைகேடு வழக்கில் கர்நாடக மாநில முதல் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த நிலையில் மேலிடத்தில் இருந்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது அது நிரூபணம் ஆகியுள்ளது என கர்நாடக மாநில உள்துறை மந்திரி பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஒப்புதல் வழங்கியது தொடர்பாக பரமேஷ்வரா கூறியதாவது-

மேலிடத்தில் இருந்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது இதன் மூலம் தெளிவாகிறது. சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு நுணுக்கமான வகையில் தெளிவான விளக்கம் அளித்திருந்தோம். அதில் இந்த முறைகேட்டில் சித்தராமையா எப்படி கட்டமைக்கப்பட்டிருந்தார் என்பது குறித்து தெரிவித்திருந்தோம். அப்படியிருந்தும் ஆளுநர் விசாரணைக்கு ஒப்புதல் வழங்கியிருப்பது, மேலிட (மத்திய அரசு) அழுத்தம் என்பதை இயற்கையாகவே உணர்கிறோம்.

தொடக்கத்தில் இருந்தே ஆளுநர் மாளிகை தவறாக பயன்படுத்தபட்டு வருவதாக சொல்லிக் கொண்டு வருகிறோம். தற்போது அது நிரூபணம் ஆகியுள்ளது.

சித்தராமையாவுக்கு எதிராக எந்தவிதமான விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை பார்க்க வேண்டும். சட்டப்பூர்வமாக இதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு கர்நாடக மாநில உள்துறை மந்திரி பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News