இந்தியா

ரூபாய் நோட்டு

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை உயர்த்தியது மத்திய அரசு

Published On 2022-09-29 23:55 GMT   |   Update On 2022-09-29 23:55 GMT
  • சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை 0.3 சதவீதம் வரை மத்திய அரசு உயர்த்தியது.
  • விவசாயிகள் கடன் அட்டைக்கான காலவரம்பும், வட்டி விகிதமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

அஞ்சலகங்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு (3 மாதங்கள்) ஒரு தடவை மத்திய அரசு வட்டி விகிதங்களை மாற்றி அமைத்து வருகிறது.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டான அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3 மாதங்களுக்கு வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் நேற்று மாற்றி அமைத்தது.

அதன்படி, 3 ஆண்டுகால டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 5.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 0.3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 7.4 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமாக உயருகிறது. இது, 0.2 சதவீத உயர்வு ஆகும்.

விவசாயிகள் கடன் அட்டைக்கான காலவரம்பும், வட்டி விகிதமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதத்தில் இருந்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 1.4 சதவீதம் உயர்த்தியுள்ளது. 3 தவணைகளாக இவை உயர்த்தப்பட்டன. அதற்கேற்ப முதலீட்டுக்கான வட்டி விகிதங்களையும் மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

Tags:    

Similar News