குஜராத்தில் கன மழை: வெள்ளத்தில் சிக்கிய 55 தமிழக சுற்றுலாப் பயணிகள்
- சுற்றுலாப் பயணிகளின் பஸ் திடீா் பெருவெள்ளத்தில் சிக்கியது.
- பஸ்சில் இருந்தவா்களை ஜன்னல்கள் மூலம் பத்திரமாக வெளியேற்றினா். பஸ்சில் இருந்தவா்களை ஜன்னல்கள் மூலம் பத்திரமாக வெளியேற்றினா்.
பாவ்நகர்:
குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் தமிழக சுற்றுலாப் பயணிகள் சென்ற பஸ் நேற்று மாலை சிக்கிக் கொண்டது. அவா்களை பத்திரமாக மீட்பு படையினா் மீட்டபோதும், வெள்ளம் குறைவதற்காக அங்கே லாரியில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து பாவ்நகா் பேரிடா் மேலாண்மைப் பிரிவு அதிகாரி சதீஷ் ஜாம்புஜா மேலும் கூறுகையில், 'பாவ்நகரில் உள்ள கோலியாக் கிராமத்தில் உள்ள நிஷ்காலங்க் மகாதேவ் கோவிலுக்கு சென்று திரும்பிய தமிழக சுற்றுலாப் பயணிகளின் பஸ் திடீா் பெருவெள்ளத்தில் சிக்கியது.
லாரியில் அப்பகுதிக்கு சென்ற மீட்புப் படையினா் பஸ்சில் இருந்தவா்களை ஜன்னல்கள் மூலம் பத்திரமாக வெளியேற்றினா். ஆனாலும் வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருப்பதால் அவா்கள் லாரியிலே அங்கே உள்ளனா். வெள்ளம் குறைந்தபிறகு அவா்கள் மீட்டு வரப்படுவாா்கள்' என்றாா்.