இந்தியா

உக்ரைன் அமைதிக்கான கூட்டு அறிக்கையில் கையெழுத்திடாத இந்தியா

Published On 2024-06-17 11:07 GMT   |   Update On 2024-06-17 11:07 GMT
  • இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விருப்பங்கள் மட்டுமே நிலையான அமைதிக்கு வழிவகுக்கும்.
  • சீனா இந்த கூட்டத்தில் கலந்து கொள்வில்லை. ரஷியாவுக்கு அழைப்பு இல்லை.

உக்ரைன் நாட்டின் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சுவிட்சர்லாந்தில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கலந்து கொண்டார். மேலும் நாட்டின் அதிபர்கள் கலந்து கொண்டனர். பல நாடுகள் தங்களது நாட்டின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பி வைத்தனர். 100-க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் (மேற்கு) பவன் கபூர் கலந்து கொண்டார். இரண்டு நாட்களில் நட்சத்திர ரிசார்ட்டில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இதில் உக்ரைன் அமைதிக்கான கூட்டு அறிக்கை உருவாக்கப்பட்டு அதில் தலைவர்கள் கையெழுத்திட்டனர். ஆனால், இந்தியா இந்த கூட்டு அறிக்கையில் கையெழுத்திடவில்லை. மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் இதில் கலந்து கொள்ள வேண்டும். இதனால் இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் ரஷியா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரஷியாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. சீனா எதிர்ப்பு தெரிவித்து கலந்து கொள்வில்லை.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன்- ரஷியா இடையிலான பிரச்சனைக்கு தீர்வு காண ரஷியா இல்லாமல் அமைதிக்கான கூட்டு அறிக்கை உருவாகிய நிலையில் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.

எங்கள் பார்வையில், இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விருப்பங்கள் மட்டுமே நிலையான அமைதிக்கு வழிவகுக்கும். எங்களுடைய அணுகுமுறை தொடர்ந்து நிலையானதாக இருக்கும். பேச்சுவார்த்தை, ராஜாங்கரீதி வழியாக மட்டுமே அமைதியை அடைய முடியும் என இந்தியா தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News