இந்தியா

படகில் கடத்தப்பட்ட 700 கிலோ போதை பொருள்.. அதிரடியாக தட்டித்தூக்கிய கடற்படை - பாராட்டி தள்ளிய அமித் ஷா

Published On 2024-11-15 12:02 GMT   |   Update On 2024-11-15 12:02 GMT
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து.
  • 700 கிலோ கடத்தல் மெத்தபெட்டமைனை கைப்பற்றியுள்ளன.

குஜராத்தில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடித்து, 700 கிலோவுக்கும் அதிகமான மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்த பாதுகாப்பு நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "போதையில்லா பாரதத்திற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையைப் பின்பற்றி, இன்று நமது ஏஜென்சிகள் ஒரு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடித்து, குஜராத்தில் சுமார் 700 கிலோ கடத்தல் மெத்தபெட்டமைனை கைப்பற்றியுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.

 


உளவுத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட தகவலின் பேரில், சாகர் மந்தன் 4 என்ற பெயரில் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தேடுதல் வேட்டையின் போது, சந்தேகத்திற்குரிய வகையில் படகு ஒன்று கடற்படையால் அடையாளம் காணப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டது.

அதன்பிறகு அந்த படகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் 700 கிலோ மெத்தாம்பெட்டமைன் கண்டுபிடிக்கப்பட்டு, கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையை தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு, இந்திய கடற்படை மற்றும் குஜராத் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு படை ஆகியவை இணைந்து மேற்கொண்டன.

Tags:    

Similar News