இந்தியா

ஜார்கண்டில் மோடி பிரசாரம் - ராகுல் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுப்பு - காங்கிரஸ் பாய்ச்சல்

Published On 2024-11-15 12:36 GMT   |   Update On 2024-11-15 12:36 GMT
  • பிரதமர் மோடி ஜார்கண்டின் தியோகர் பகுதியில் பிரசாரம் செய்தார்
  • ராகுல் காந்தியின் பிரசாரத்தை சீர்குலைக்க பாஜக முயன்றதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 13 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் மக்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஜார்கண்டில் பிரசாரம் செய்ய வந்துள்ளார். இந்நிலையில் ஹெலிகாப்டர் மூலம் பிரசாரதிற்காக கோடா பகுதியில் இருந்து ராகுல் காந்தி கிளம்ப முற்பட்டார்.

ஆனால் அவரது ஹெலிகாப்டர் அங்கு பரப்பதற்கு வான் போக்குவரத்து கட்டுப்பாடு (ATC அறையிலிருந்து ஏர் கிளியரன்ஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ராகுல் காந்தி பிரசாரம் செல்வதில் 45 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்பட்டது.

பிரதமர் மோடி ஜார்கண்டின் தியோகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது ராகுல் காந்தியின் பிரசாரத்தை சீர்குலைக்கவே பாஜக வேண்டுமென்றே இதைச் செய்துள்ளதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதனையடுத்து பாஜக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்குக் காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.

Tags:    

Similar News