இந்தியா
null

ஜூன் மாதம் இந்தியாவை கதிகலங்க செய்யும் ரெயில் விபத்துகள்

Published On 2024-06-17 08:04 GMT   |   Update On 2024-06-17 08:41 GMT
  • ரெயில் விபத்துகள் பெரும் துயரை ஏற்படுத்தி வருகின்றன.
  • விபத்து பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

நீண்ட தூர பயணத்தின் போது உடல் அசதி ஏற்படாமல் பார்த்துக் கொள்வது ரெயில்களுக்கே உரிய தனி சிறப்பு எனலாம். இந்திய மக்களின் போக்குவரத்தில் ரெயில்வே துறைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. மேலும், இந்தியாவில் ரெயில் பயண கட்டணங்கள் மற்ற போக்குவரத்து முறைகளுடன் ஒப்பிடும் போது கணிசமான அளவுக்கு குறைவாகவே நிர்ணயம் செய்யப்படுகிறது.

இப்படி ரெயில் பயணம் குறித்த நன்மைகளை பட்டியலிட முடியும் என்ற போதிலும், இவற்றில் ஏற்படும் சிறு கோளாறில் துவங்கி, விபத்து என எதுவாயினும் அதனை பயன்படுத்துவோருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும். அந்த வகையில், ரெயில்கள் விபத்தில் சிக்குவது சமீப காலங்களில் பெரும் துயரை ஏற்படுத்தி வருகிறது.

 


இன்று காலை மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங்கில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்து பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜூன் மாதம் என்றாலே இந்தியாவில் ரெயில் விபத்துக்களை தவிர்க்க முடியவில்லை என்றாகிவிட்டது.


 

கடந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி ஒடிசா மாநிலத்தில் மூன்று ரெயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்து அரங்கேறியது. இந்த ரெயில் விபத்தில் சிக்கி 293 பேர் உயிரிழந்தனர். மேலும், 1200-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் கடந்த ஆண்டு நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டு ஜூன் மாதமும் ரெயில் விபத்து ஏற்பட்டு இருப்பது கவனிக்க வேண்டிய ஒன்றாக மாறியிருக்கிறது.

Tags:    

Similar News