இந்தியா

அதானி, அம்பானியை ஏ1, ஏ2 எனக் குறிப்பிட்டு மக்களவையில் பேசிய ராகுல் காந்தி

Published On 2024-07-29 09:49 GMT   |   Update On 2024-07-29 09:49 GMT
  • அதானி, அம்பானியை பாதுகாக்க நடுத்தர மக்களை மத்திய அரசு ஏமாற்றுகிறது.
  • பட்ஜெட் அல்வாவின் பெரும்பகுதி குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டு விட்டது.

பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று மதியம் மக்களவையில் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சிறு குறு தொழிற்சாலைகளுக்கு எதிராக வரித் தீவிரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தக்கோரி விவசாயிகள் போராடியும் பலனில்லை. பேராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை சந்திக்க விடாமல் மத்திய அரசு என்னை தடுக்கிறது. நாட்டில் நடுத்தர வர்க்க மக்களை மோடி அரசு முதுகில் குத்தியுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த கோரி விவசாயிகள் போராடியும் பலனில்லை.

நாடு முழுவதும் வேலை வாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் தவித்து வருகின்றனர். வேலையில்லாத இளைஞர்களுக்கு வெறும் பயிற்சி மட்டுமே அளிப்பது போதாது.

தாக்கப்பட்ட பட்ஜெட்டில் கல்விக்கான நிதியை குறைத்தது ஏன்?

எந்த உதவியும் செய்யாமல் நடுத்தர குடும்பங்களை மோடி அரசு கைவிட்டு விட்டது. ஐடி மறறும் ஜிஎஸ்டி அமைப்புகள் மூலம் சிறுகுறு தொழில் முனைவோருக்கு அச்சுறுத்ல் கொடுக்கப்படுகிறது. பட்ஜெட் மூலம் நடுத்தர மக்களை மத்திய அரசு ஏமாற்றியுள்ளது.

அதானி, அம்பானியை பாதுகாக்க நடுத்தர மக்களை மத்திய அரசு ஏமாற்றுகிறது. அதானி, அம்பானியை பாதுகாக்க மக்களுக்கு எதிராக மத்திய அரசு சக்கரவியூகம் அமைத்துள்ளது. (அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா அவையில் அதானி, அம்பானி பெயரைக் குறிப்பிடக் கூடாது என்றார். உடனே ராகுல் காந்தி A1, A2 என அவர்களை குறிப்பிட்டு பேசினார்.)

நாட்டில் தலித், ஆதிவாசி, பிற்படுத்தப்பட்ட மக்கள் 73 சதவீத் பேர் உள்ளனர். 73 சதவீதம் உள்ள மக்களுக்கு பட்ஜெட்டில் என்ன கொடுத்தீர்கள்?

பட்ஜெட் அல்வாவின் பெரும்பகுதி குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டு விட்டது (அப்போது நிர்மலா சீதாராமன் அல்வா வழங்கும் போட்டோவை காட்டினார்). பட்ஜெட் அல்வா நிகழ்ச்சியில் ஒரு ஆதிவாசி அதிகாரி கூட இல்லை.

இந்து மதம் என்ன கூறுகிறது என பாஜக-வினருக்கு தெரியவில்லை. அமைதி, பொறுமையை போதிக்கும் இந்து மதத்தை பாஜக தவறாக பரப்புகிறது.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Tags:    

Similar News