காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீடு முறிவு குறித்து மம்தா விளக்கம்
- மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட முடிவு.
- பாஜகவுடனான எங்கள் போராட்டம் தொடரும் என மம்தா அறிவிப்பு.
மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.
தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிட போவதாக அக்கட்சியின் முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்தார்.
இரு மாநில முதலமைச்சர்களின் இந்த அறிவிப்பு இந்தியா கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீடு முறிவு தொடர்பாக மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார்.
இதுகுறத்து அவர் கூறியதாவது:-
மேற்கு வங்கத்தில் ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாத காங்கிரசுக்கு 2 எம்.பி சீட் தருவதாக கூறியதை காங்கிரஸ் ஏற்கவில்லை.
காங்கிரஸோ அதிக இடங்கள் வேண்டும் என்று கேட்டனர். இப்போது நான் ஒரு சீட் கூட அவர்களுக்கு கொடுக்கப் போவதில்லை.
பாஜகவுடனான எங்கள் போராட்டம் தொடரும். தனித்து போராடுவோம். பாஜகவை தோற்கடிக்க எங்களால் முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.