இந்தியா

கிறிஸ்தவர்கள் அதிகளவு வாழும் மணிப்பூரில் வரும் ஈஸ்டர் ஞாயிறு அரசு வேலை நாளாக அறிவிப்பு

Published On 2024-03-28 09:46 GMT   |   Update On 2024-03-28 09:46 GMT
  • 2011-ம் ஆண்டு மக்களை தொகை கணக்கெடுப்பின்படி மணிப்பூர் மாநிலத்தில் 28 லட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர்
  • இந்தியாவில் அதிகளவில் கிறிஸ்தவர்கள் வாழும் மாநிலமான மணிப்பூரில் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் ஞாயிறு வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் வரும் ஈஸ்டர் ஞாயிறு அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டு முடிய உள்ளதால் 30, 31 (சனி, ஞாயிறு) இரு நாட்களும் அரசு வேலை நாள் என மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் அதிகளவில் கிறிஸ்தவர்கள் வாழும் மாநிலமான மணிப்பூரில் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசின் இந்த உத்தரவு கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக அம்மாநிலத்தின் பழங்குடியின அமைப்பு தெரிவித்துள்ளது.

உடனடியாக இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று நாகா மாணவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

2011-ம் ஆண்டு மக்களை தொகை கணக்கெடுப்பின்படி மணிப்பூர் மாநிலத்தில் 28 லட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். இது அம்மாநில மக்கள் தொகையில் 40% என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News