இந்தியா (National)

மிதக்கும் மும்பை.. 6 மணிநேரத்தில் 30 செ.மீ. மழை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Published On 2024-07-08 03:49 GMT   |   Update On 2024-07-08 03:49 GMT
  • மும்பையில் 6 மணிநேரத்தில் 30 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது.
  • மும்பையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல வழித்தடங்களில் உள்ளூர் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

மும்பையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அடுத்த 2-3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவின் புனே, ரத்னகிரி, ராய்காட், சிந்துதுர்க், அமராவதி மற்றும் நாக்பூர் மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் மும்பையில் நகரின் பல்வேறு இடங்களில் அதிகாலை 1 மணி முதல் காலை 7 மணி வரையிலான ஆறு மணி நேரத்தில் 300 மிமீ மழை பதிவாகியுள்ளது. வடாலா மற்றும் ஜிடிபி நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அந்தேரி, குர்லா, பாண்டுப், கிங்ஸ் சர்க்கிள், தாதர் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

கனமழை காரணமாக மும்பையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல வழித்தடங்களில் உள்ளூர் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. கனமழையால் நகரின் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

Tags:    

Similar News