உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நகரங்கள், தேர்வுமையம் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் வெளியானது
- நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
- நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எம்பிபிஎஸ் படிப்பிற்கான நீட் தேர்வு (NEET-UG) கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. தேர்வுக்கு முன்னதாக வினாக்கள் வெளியானதாக குற்றம்சாட்டப்பட்டது. தேர்வு முடிவு வெளியானபோது, பல மாணவர்கள் தேர்வில் பெற முடியாத மதிப்பெண்களை பெற்றனர். இதுகுறித்து தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமை சில மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது எனத் தெரிவித்தது.
இதனால் மாணவர்கள் நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. இதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதேநேரத்தில் முழு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மத்திய அரசு மற்றும் மத்திய தேர்வு முகவை மறு தேர்வு நடத்த சம்மதம் எனத் தெரிவித்தால் அதற்கு ஏற்ப உத்தரவு வழங்கக் கூடாது என வழக்கு தொடர்ந்தது.
நீட் தொடர்பான அனைத்து மனுக்கள் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையின் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது அப்போது நீதிமன்றம் மறுதேர்வுக்கு உத்தரவிட மறுத்தது.
ஆனால், தேசிய தேர்வு முகவை தேர்வு மையங்கள் வாரியாகவும், நகரங்கள் வாரியாகவும் நீட் தேர்வு முடிவை வருகிற 20-ந்தேதி மதியம் 2 மணிக்குள் வெளியிட வேண்டும். மாணவர்கள் பெயர்களை மறைத்து மதிப்பெண்களை வெளியிட வேண்டும் அப்போதுதான் நடந்ததை அறிய முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, மையம் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை exams.nta.ac.in/NEET/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.