இந்தியா

நீட் முறைகேடு விவகாரம்: ஜார்கண்டில் மேலும் ஒருவர் கைது

Published On 2024-07-04 02:10 GMT   |   Update On 2024-07-04 02:10 GMT
  • ஜார்கண்டை மையமாக கொண்டு செயல்படும் வினாத்தாள் கசிய விடும் கும்பல் ஒன்று குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு உளவுத்தகவல் கிடைத்தது.
  • கைது செய்யப்பட்ட அமன் சிங்கிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

புதுடெல்லி:

நீட் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக 6 வழக்குகளை பதிவு செய்துள்ள அதிகாரிகள், பல்வேறு மாநிலங்களில் சோதனை, கைது என தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதில் ஜார்கண்டை மையமாக கொண்டு செயல்படும் வினாத்தாள் கசிய விடும் கும்பல் ஒன்று குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு உளவுத்தகவல் கிடைத்தது. இது தொடர்பாக விசாரித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக தன்பாத்தை சேர்ந்த அமன் சிங் என்பவரை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இவரும் ஒரு குற்றவாளி என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கைது செய்யப்பட்ட அமன் சிங்கிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

முன்னதாக ஜார்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக்கை மையமாக கொண்டு இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றின் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News