இந்தியா
- 1500 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
- தேர்வு ஆறு நகரங்ளில் வெவ்வேறு மையங்களில் நடைபெற்றது.
மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே 5-ந்தேதி நடந்தது. இதில் 23 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதற்கிடையே நீட் தேர்வில் சுமார் 1500 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 பேருக்கு மறுதேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
கருணை மதிப்பெண் வழங்கப்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறுதேர்வில் 813 பேர் கலந்து கொண்டு மறுதேர்வை எழுதினர். இந்த தேர்வு ஆறு நகரங்ளில் வெவ்வேறு மையங்களில் நடைபெற்றது.