இந்தியா

யூஜிசி- நெட் தேர்வைப்போல் நீட் தேர்வை ரத்து செய்யும் எண்ணம் இல்லை: மத்திய கல்வி அமைச்சர்

Published On 2024-06-20 14:55 GMT   |   Update On 2024-06-20 14:55 GMT
  • வெளிப்படை தன்மையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.
  • முறைகேடு தொடர்பாக விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மாணவர்களன் நலன்களை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்பதை அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன்.

வெளிப்படை தன்மையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.

பீகாரில் நீட் வினாத்தாள் கசிந்த ஒரு சம்பவம், அந்த தேர்வை எழுதிய லட்சக் கணக்கான மாணவர்களை பாதிக்கக் கூடாது.

முறைகேடு தொடர்பாக விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.

யூஜிசி- நெட் தேர்வைப்போல் நீட் தேர்வை ரத்து செய்யும் எண்ணம் இல்லை. நீட் விவகாரத்தை அரசியாக்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News