இந்தியா
ரெயில் விபத்தில் பலியான 278 பேரில் 40 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
- குறிப்பிட்ட ஒரு பெட்டியில் மட்டும் 40 உடல்கள் மீட்கப்பட்டன.
- மின்சாரம் தாக்கியதால் தான் 40 பேர் உயிரிழந்து இருப்பதாக கருதப்படுகிறது.
ஒடிசா:
ஒடிசாவில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தை சந்தித்தபோது 278 பயணிகள் உயிரிழக்க நேரிட்டது. பெரும்பாலானவர்களின் உடல்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. பலருக்கு உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு பெட்டியில் மட்டும் 40 உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களது உடலில் எந்த காயமும் இல்லை. சிறு ரத்த துளிகூட வெளியேறவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர்கள் 40 பேரும் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது.
கோர மண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் தரம் புரண்டபோது எதிர்திசையில் வந்த பெங்களூரு-அவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் பயங்கரமாக மோதியது. அப்போது ரெயில்வே மின்கம்பங்கள் சாய்ந்தன. அதில் இருந்த மின்சாரம் தாக்கியதால் தான் 40 பேர் உயிரிழந்து இருப்பதாக கருதப்படுகிறது.