சென்னை மெட்ரோ ரெயில் திட்டம்: மத்திய அரசு 65% தொகையை வழங்கும்- நிர்மலா சீதாராமன்
- மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட்டுக்கு நேரடியாக நிதி வழங்கப்படும்.
- வெளிநாட்டு கடன்களை மாநில அரசுக்கானதாக இல்லாமல் மத்திய அரசுக்கானதாக கருதப்படும்.
சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு 65 சதவீத தொகையை மத்திய அரசு வழங்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறியதாவது:-
ரூ.63246 கோடி மதிப்பீட்டுச் செலவில் 65 தவீதத்தை மத்திய அரசே வழங்கும்.
மேலும், இதுவரை 90 சதவீத அளவிற்கு மாநில அரசின் நிதியாக கொண்டு மாநில அரசின் திட்டமாக செயல்படுத்தப்பட்டது.
தற்போது, மத்திய அரசின் திட்டமானதால் ரூ.33,593 கோடி முழுக் கடனும், சபங்கு மற்றும் சார்நிலைக் கடனான ரூ.7,425 கோடியும் அடங்கும்.
எஞ்சிய 35 சதவீத மதிப்பீட்டுச் செலவுக்கு மாநில அரசு நிதியுதவி செய்யும்.
மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட்டுக்கு நேரடியாக நிதி வழங்கப்படும்.
வெளிநாட்டு கடன்களை மாநில அரசுக்கானதாக இல்லாமல் மத்திய அரசுக்கானதாக கருதப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.