இந்தியா (National)

ஆட்சியமைத்த 125 நாட்களில் ரூ. 9 லட்சம் கோடி கட்டமைப்பு திட்டங்கள் தொடக்கம்: பிரதமர் மோடி

Published On 2024-10-21 05:22 GMT   |   Update On 2024-10-21 05:22 GMT
  • 9 விமான நிலையங்கள் கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ளது.
  • சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 125 நாட்களில் 6 முதல் 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

டெல்லியில் நடைபெற்று வரும் தனியார் டி.வி.யின் உலக மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

இந்தியா அனைத்து துறைகளிலும் செயல்பட்டு வருகிறது. இது முன்னெப்போதும் இல்லாத அளவில் சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு கவலைகளில் மூழ்கியுள்ள உலகிற்கு இந்தியா நம்பிக்கை அளிக்கிறது.

நாங்கள் 3-வது முறையாக ஆட்சிய அமைத்து 125 நாட்கள் முடிவடைந்துள்ளது. 9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கட்டமைப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

15 புதிய வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. 9 விமான நிலையங்கள் கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ளது. 5 லட்சம் வீடுகளின் கூரை மேல் சோலார் அமைக்கப்பட்டுள்ளது. 90 கோடிக்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளன. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 125 நாட்களில் 6 முதல் 7 சதவீதம் உயர்ந்துள்ளது. நம்முடைய அந்நிய செலாவணி 700 பில்லியனுக்கு மேல் உயர்ந்துள்ளது.

'விக்சித் பாரத்' பற்றிய விவாதங்கள் இப்போது பொது விழிப்புணர்வின் ஒரு பகுதியாக உள்ளது. இது 'ஜனசக்தி' 'ராஷ்டிர சக்தி'க்கு மிகப்பெரிய உதாரணம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Similar News