இந்தியா
லட்சத்தீவின் வளர்ச்சிக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும்: பிரதமர் மோடி
- திருச்சி பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி லட்சத்தீவு சென்றடைந்தார்.
- அங்கு பேசிய பிரதமர் மோடி, லட்சத்தீவின் வளர்ச்சிக்கு இந்தியா துணைநிற்கும் என்றார்.
அகாட்டி:
திருச்சி பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி லட்சத்தீவு சென்றடைந்தார். அங்கு நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
லட்சத்தீவு பல வரலாற்று நிகழ்வுகளைச் சுமந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு நீண்ட காலமாக லட்சத்தீவுகளின் உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை.
கப்பல் போக்குவரத்து இந்த இடத்தின் உயிர்நாடியாக இருந்தாலும் இங்குள்ள துறைமுக உள்கட்டமைப்பு பலவீனமாகவே உள்ளது. சுகாதாரம், கல்வி, பெட்ரோல், டீசல் என பல பிரச்சினைகளை இங்குள்ள மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.
இந்த சவால்களை எல்லாம் நம் அரசு இப்போது எதிர்கொள்கிறது. பல துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கி வருகின்றன. லட்சத்தீவின் வளர்ச்சிக்கு இந்திய அரசு எப்போதும் துணை நிற்கும் என தெரிவித்தார்.