இந்தியா

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல்

Published On 2024-06-24 14:41 GMT   |   Update On 2024-06-24 14:41 GMT
  • பாலியல் துன்புறுத்தல் தொடர்பான மூன்றாவது வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அவரைக் காவலில் எடுத்தது.
  • தற்போது நீதிமன்றம் ஜூலை 8-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா மீது பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 3 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பி சென்றார். இதையடுத்து அவரை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரம் காட்டி வந்தனர். அதன் பேரில் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 31-ந்தேதி கைது செய்தனர்.

இதையடுத்து பலாத்கார வழக்குகள் குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். 2 முறை போலீஸ் காவலில் எடுத்து பிரஜ்வலிடம் விசாரணை நடத்தினர். பின்னர் காவல் முடிவடைந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஆஜர்படுத்தப்பட்டபோது எஸ்ஐடி மேற்கொண்டு விசாரணை நடத்த பிரஜ்வாலின் காவலிலை நீட்டிக்க கோரிக்கை வை்ககவில்லை. இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரஜ்வல் பலத்த பாதுகாப்புடன் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

விசாரணையின் போது, இரைப்பை பிரச்சினைகள் குறித்து பிரஜ்வால் புகார் செய்தார். இதற்கு பதிலளித்த நீதிபதி, அவரது உடல்நிலையை கண்காணிக்க எஸ்ஐடி அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

Similar News