விநாயகர் சதுர்த்தி திருநாள்: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
- விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
- இதையொட்டி, நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தனர்.
புதுடெல்லி:
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், விநாயக சதுர்த்தியின் புனிதமான தருணத்தில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகிழ்ச்சியான திருவிழா அறிவு, ஞானம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கும் அதே வேளையில், பணிவு மற்றும் கடமையைத் தழுவுவதற்கு மக்களை ஊக்குவிக்கிறது என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டு மக்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். கணபதி பாப்பா மோரியா என பதிவிட்டுள்ளார்.