மேற்கு வங்காளத்தில் "பீடி" தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய ராகுல்
- காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை அசாமில் பல தடைகளை எதிர்கொண்டது.
- பெண் பீடித்தொழிலாளர்களின் கேள்விகளுக்கும் ராகுல் கலகலப்பாக பதிலளித்து பேசினார்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரையின் 2-ம் கட்ட யாத்திரையான "இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை" கடந்த 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கினார்.
பல்வேறு மாநிலங்கள் வழியாக அசாம் வந்த அவரது யாத்திரை, பின்னர் மேற்கு வங்கத்திற்குள் நுழைந்தது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை அசாமில் பல தடைகளை எதிர்கொண்டது.
பாரத் ஜோடோ நியாய யாத்ராவின் குறிக்கோள் நாட்டிற்கு பொருளாதார மற்றும் சமூக நீதியை கொண்டு வருவதை நோக்கமாக கொண்டுள்ளதாக ராகுல் கூறியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் நடந்த யாத்திரையின்போது முர்ஷிதாபாத்தில் பீடி சுற்றும் தொழிலாளர்களை ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்தார். அவர்களுடன் தரையில் அமர்ந்து கலந்துரையாடிய ராகுல் காந்தி, பீடி தொழிலில் உள்ள பிரச்சனைகள் குறித்து தொழிலாளர்களிடம் கேட்டறிந்தார். பெண் பீடித்தொழிலாளர்களின் கேள்விகளுக்கும் ராகுல் கலகலப்பாக பதிலளித்து பேசினார்.
முன்னதாக ராகுல் காந்தியின் வாகனத்தின் மீது நேற்று திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கார் கண்ணாடி நொறுங்கியது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | West Bengal: Congress MP Rahul Gandhi interacts with 'beedi' workers as Bharat Jodo Nyay Yatra reaches Murshidabad. pic.twitter.com/8hczudEaNZ
— ANI (@ANI) February 1, 2024